OUR CLIENTS
'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்!
'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்! Posted on 19-Jun-2017 'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி  நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்!

சென்னை, ஜூன் 19-
சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஹைரோட்டில் போதைப்பாக்கு விற்பனை அமோகமாக நடந்து வந்ததாக செய்தி வெளியானதும் அந்த கடைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வள்ளுவர் கோட்டம் ஹைரோட்டில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை அருகில் பான்மசலா போன்ற போதை பொருட்கள் அமோகாக காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த கடைக்கும் காவல் நிலையத்துக்கும் இடைப்பட்ட தொலைவு 10 மீட்டர்தான். 

இந்த கடைக்கு லாரிகளில் தினமும் லோடு வந்து இறங்குவதும், மீன்பாடி வண்டிகளில் இங்கிருந்து பாரிமுனை, ஏழுகிணறு, தேனாம்பேட்டை, வடபழனி உள்ளிட்ட இடங்களில் இவர்களது கிளை நிறுவனங்களுக்கு போதை பாக்குகள் விநயோகம் செய்து வந்தனர். இதனால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தால் அவர்களை மிரட்டி வந்துள்ளனர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார். போதை பாக்கு விற்பனை செய்யும் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு பக்கபலமாக விளங்குபவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள சில கருப்பு ஆடுகள்தான். தினமும் ரூ.3 லட்சம் வரை விற்பனையாவது தெரியவந்தது. 

இதுகுறித்து ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (ஜார்ஜ்) இருந்தபோது புகார் கொடுத்துள்ளனர் 
இந்தப்பகுதிவாழ் பொதுமக்கள். ஆனால் அவர் ஏனோ நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு பின்புலமாக மாமூல் இருந்து வந்துள்ளது. மாமூல் மழையில் நனைந்ததால் யாரும் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வெளியிட்ட 'காலச்சக்கரம்' நாளிதழில் 8ம் பக்கத்தில் நிருபர் டைரி பக்கத்தில் நுங்கம்பாக்கத்தில் போதைப்பாக்கு விற்பனை அமோகம் மாமூல் வாங்கி கொண்டு குறட்டை விடும் போலீசார் என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியானது. அன்று பரப்பாக பேசப்பட்டதால் பொதுமக்கள் நலன் கருதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் வேறு வழியின்றி அந்த போதைப்பாக்கு விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர். அந்தப்பகுதிவாழ் மக்கள் யாரும் செய்யாததை 'காலச்சக்கரம்' நாளிதழ் வாயிலாக சாதித்து காட்டியுள்ளது என பேசிக் கொள்கின்றனர்.  

Label