OUR CLIENTS
பாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது!
பாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது! Posted on 19-Jun-2017 பாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது!

வேலூர், ஜூன் 19-
வேலூர் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பாகாயம் உதவி ஆய்வாளர் ஒருவர் மாமூல் வாங்கி செல்வதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

வேலூர் மாநகரம் ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ளதால் சித்தூர், சீத்தாலபள்ளி, ராமாபுரம் பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் சுடசுட காய்ச்சி விற்பனைக்காக வேலூர் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக வேலூர் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முல்லைநகரில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து அமோகமாக விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. காலை 6 மணிக்கெல்லாம் கள்ளச்சாராய வியாபாரம் களைகட்ட ஆரம்பித்து விடுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இப்படி முல்லை நகரில் அந்த குறிப்பிட்ட வீட்டில் விற்பனை செய்ய காரணமே பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் தான் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.  

அவர் கள்ளச்சாராயம் விற்கும் நபரிடம் மாதம் ரூ.50 ஆயிரம் மாமூல் வாங்கி கொண்டு கடையை நடத்தி கொள்ளுமாறு அனுமதி கொடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாராயம் முல்லைநகரில் ஆறாக ஓடுகிறது. சாராய வியாபாரியிடம் இருந்து பெறப்படும் ரூ.50 ஆயிரம் மாமூல் தொகை யார்... யா-ருக்கு... செல்கிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம். சமூகவிரோத செயல்களை கண்டிக்க வேண்டிய உதவி ஆய்வாளரே மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 இந்த காவல் உதவி ஆய்வாளரின் பணியே சாராய மாமூல் வசூலிப்பது மற்றும் வாகன தணிக்கை நடத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவதே தொழிலாக கொண்டுள்ளார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த பிரச்னையில் தலையிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நேரில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.  இதுபோன்ற உதவி ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Label