OUR CLIENTS
மீராகுமாரை பலியாடாக ஆக்கிவிட்டது காங்கிரஸ்: பாஜக கருத்து
மீராகுமாரை பலியாடாக ஆக்கிவிட்டது காங்கிரஸ்: பாஜக கருத்து Posted on 22-Jun-2017 மீராகுமாரை பலியாடாக ஆக்கிவிட்டது காங்கிரஸ்: பாஜக கருத்து

புதுடில்லி, ஜூன் 23-
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீராகுமாரை பலியாடாக காங்கிரஸ் கட்சி ஆக்கிவிட்டது என்று பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் இன்று கூறினார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போது அவர்கள் நினைத்து இருந்தால் தலித் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் மீராகுமார் காங்கிரஸ் கட்சிக்கு பொருத்தமான வேட்பாளராக தோன்றவில்லை.
இப்பொழுது எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார் என்ற நிலையில் மீராகுமாரை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. மீராகுமாரை பலியாடாக காங்கிரஸ் ஆக்கி உள்ளது.
ராம்நாத் கோவிந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகிவிட்டது. அதிமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தந்துள்ள நிலையில் வெற்றி உறுதியாகி விட்டது என்று ஜி.வி.எல். நரசிம்மராவ் குறிப்பிட்டார்.

Label