OUR CLIENTS
நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் - சிபிஐ தலையிட முடியாது உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பதில் மனு
நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் - சிபிஐ தலையிட முடியாது உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பதில் மனு Posted on 23-Jun-2017 நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் - சிபிஐ தலையிட முடியாது உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பதில் மனு

சென்னை, ஜூன் 23-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதி செய்ய நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் சிபிஐ தலையிட முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத் தலைவர் தனபாலின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும் என  உயர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றிப் பெற்றது. இதை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி கடந்த வாரம் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.  சரவணன் பேசுவது போல ஒரு காட்சியை வெளியிட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க் களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம்  ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில், நம்பிக்கை தீர்மானம் தமிழக சட்டசபைக்குள் நடந்தது. அந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.கக்கள் சட்டசபைக்குள் தான் ஓட்டுப் போட்டனர்.எனவே, சட்டசபைக்குள் நடந்த ஒரு சம்பவம் குறித்து சி.பி.ஐ. மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கொண்டு விசாரிக்க முடியாது. இந்த விவகாரம் சட்டசபை உரிமை சம்பந்தப்பட்டது. எனவே, சி.பி.ஐ. மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்று  முதல்வர் பழனிசாமி பதில் மனுவில் கூறியுள்ளார்.சட்டமன்ற செயலர் பூபதியும் தனியாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று -வெள்ளிக்கிழமை- மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Label