OUR CLIENTS
அதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை- பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தல் பேச்சு
அதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை- பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தல் பேச்சு Posted on 23-Jun-2017 அதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை-  பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தல் பேச்சு

சென்னை, ஜூன் 23-
அதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக அரசு பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக மாறிவிட்டதால் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்துள்ளது என்று கூறினார். 

அப்போது, கே.ஆர்.ராமசாமியின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை; அடிமைகளும் இல்லை. அதிமுகவின் ஆதரவை பா.ஜ.க. கேட்டதால் கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். 

இதனிடையே, பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரவு அளித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “கடுமையான பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க எந்த நிவாரணமும் வழங்காத பா.ஜ.க. அரசை அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி ஆதரிப்பது சந்தர்ப்பவாதம். 

பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆளுங்கட்சி ஆதரித்ததின் மூலம் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டுவிட்டன” என்று குற்றம்சாட்டினார்.

Label