OUR CLIENTS
வேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா? - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்!
வேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா? - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்! Posted on 23-Jun-2017 வேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா?  - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்!

வேலூர், ஜூன் 23-
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் அசைவ உணவகங்களில் காகங்களை சுட்டுக் கொண்டு வந்து அசைவ உணவுகளில் கலந்து பறிமாறும் அவலம் தொடர்ந்து மறைமுகமாக நடந்து வருகிறது. இதை உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.

வேலூரில் உள்ள பிரபல தனியார் அசைவ ஓட்டல்களில், அசைவப் பிரியர்களுக்காக காடை, கௌதாரி, சிக்கன் லாலிபாப் என்று பல்வேறு உணவு வகைகள் வகை வகையாக சாயம் பூசி பச்சை, சிகப்பு நிறம் தடவி விற்பனை செய்கின்றனர். இதில் பெரும்பாலும் காகத்தின் இறைச்சி கலப்படம் செய்யப்படுகிறது. இது இப்போதுதான் அம்பலம் ஆகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக காகங்கள் குறைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அதிலும் மிக முக்கியமாக சில பெரிய ஓட்டல்களில் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் வேலூர் பெயரைக் கொண்ட ஒரு பிரபல ஓட்டலில்  இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகள் நடப்பது வாடிக்கையாகியுள்ளது. காலை 6 மணி முதல் இந்த ஓட்டலில் இருந்து உணவு வீடு தேடி கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காகம், நாய், பூனைகள் அதிகாலை 3 மணி முதல் இறைச்சிக்காக இந்த ஓட்டலில் வாங்கப்படுகிறது. இந்த பிராணிகளை அவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். கோழிகளும் இறந்தவை, பறவைக்காய்ச்சல் பாதித்த கோழிகள் வாங்கப்படுகின்றன. அப்படி வாங்கும் கோழிகள் ஃபிரீசரில் பதப்படுத்தி வைக்கப்பட்டு சிறிது சிறிதாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காகம் பிடித்து கொடுத்தால்  ஐம்பது ரூபாய் முதல் எழுபது ரூபாய் வரை தருகிறார்கள் இந்த ஓட்டலில் என்று இந்த காகம் பிடிப்போர் கூலாக கூறுகின்றனர். இந்த  தொழிலில் முதலீடு இல்லாமல் லாபம் மட்டும் கிடைக்கிறது என்று கசத்தை சேர்ந்த ராதாபாய் என்ற பெண் வியாபாரி தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 50 முதல் 75க்கும் மேற்பட்ட காகங்கள் தனக்கு கிடைக்கின்றன என்று கணக்கு தெரிவித்துள்ளார் ராதாபாய். இப்படி அசைவ ஓட்டல்களில் நுகர்வோருக்கு பலதரப்பட்ட விலங்குகள், பறவைகளை சமைத்து பரிமாறுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

ஆனால் விலை என்னமோ விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இதற்காக ஒரு கதையை உதாரணமாக கூறலாம். வேலூரில் பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா? சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்தான். இப்படி நூதன முறையில் ஓட்டல்களில் ஏதேதோ அசைவ உணவுகளை சமைத்து போட்டு நுகர்வோர்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஓட்டல்களுக்கு நிரந்தரமாக சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு அலுவலரும் நடவடிக்கை எடுக்கிறார்களா (அ) அலட்சியம் காட்டுகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label