OUR CLIENTS
காட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு! Posted on 23-Jun-2017 காட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல்  : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு!

வேலூர், ஜூன் 23-
காட்பாடி தாலுகா பகுதியில் உள்ள சேர்க்காடு, பள்ளிக்குப்பம் கேட் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குடிமகன்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட மேலாளரே வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூரில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் பணி செய்கிறாரா? அல்லது வசூல் வேட்டையில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடச் சொல்கிறாரா? என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தமிழகத்தில் மூடப்பட்டு விட்டன. ஒரு சில கடைகள் மட்டும் ஆங்காங்கே மதுபிரியர்களுக்காகவே தொடர்ந்து அரசு இயக்கி வருகிறது. மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டால் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற ஆரம்பித்து விடும். இதை கவனத்தில் கொண்டுதான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டும், இயக்கப்பட்டும் வருகின்றது. இந்நிலையில் கடைகள் சொற்ப அளவில் செயல்படுவதால் டாஸ்மாக் மண்டல மேலாளரே பணியாளர்களை அழைத்து கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து லாபம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளாராம். இந்த தகவலை டாஸ்மாக் கடை சேர்க்காட்டில் பணியாற்றும் மேற்பார்வையாளர் சேகர் என்பவர் தெரிவித்துள்ளார். சேர்க்காட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் 7 விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சேர்த்து மொத்தம் 13 பேர் பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். பல கடைகள் மூடப்பட்டதால் ஒரே கடையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்கு மாற்றுப்பணியும் வழங்கப்படவில்லை என்று குறை கூறுகின்றனர். ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு ஒரு பாட்டிலுக்கு தலா ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அது பீராக இருந்தாலும் சரி ஹாட்டாக இருந்தாலும் சரி கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே மதுபாட்டில்கள் குடிமகன்களுக்கு சப்ளை செய்யப்படுகிறதாம். இதுகுறித்து யாரேனும் குடிமகன்கள் தட்டிக்கேட்டால் போதும் சேல்ஸ்மேன்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா?  நீ எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள், எங்களை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது, டாஸ்மாக் மண்டல மேலாளர் வாய்வழி உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் நாங்கள் இந்த கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்று கூலாக பதில் அளிக்கின்றனர். பல டூப்ளி«ட் சரக்குகள் விற்பனை செய்யப்படுவதால் இதை குடிக்கும் குடிமகன்கள் பலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகிறது. பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது. சாராயத்தில் சாயம் கலந்து மதுபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. மதுபாட்டில்களில் எப்படி பூரான், தேள், பல்லி உள்ளே போகும். இந்த பேக்கிங்குகள் போலியானவை என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. குடிமகன்களை ஏமாற்றி டாஸ்மாக் நிர்வாகம் விளையாடிக் கொண்டிருக்கிறது. குடிகாரன் பேச்சு பொழுதுவிடிந்தால் போச்சு என்ற ரீதியில் கொண்டு செல்லப்படுகிறது.

அதோடு இந்த சேர்க்காடு டாஸ்மாக் கடையில் வேலைக்கு வராத மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி என்பவர் தனது பங்கை மட்டும் தினமும் வாங்கிக் கொள்வாராம். இந்த கடையில் இருந்து அனைவருக்கும் பங்கு போகிறது என்று தைரியமாக யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தனது கருத்தை சேகர் பதிவு செய்துள்ளார். இங்கு கடைகளில் வாங்கிச் செல்லப்படும் மது வகைகள் கல்புதூர், காட்பாடி, பெரியபுதூர், கசம், திருவலம் ரோடு வரை கொண்டு செல்லப்பட்டு ரூ.90க்கு விற்பனையாகும் மதுபாட்டில் ரூ.130 வரை விலை வைத்து தனியார் வியாபாரிகள் விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனராம். இதற்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பக்கபலமாக விளங்குகின்றனர். இவர்கள் ஆசியோடுதான் கள்ளமார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு வந்தால் போதும் 50 பாட்டில்களை பறிமுதல் செய்து தனியார் வியாபாரிகளிடம் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிச் செல்கின்றனர். இது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. காவல் துறையில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவில் வேலூரில் பணியாற்றும் சில கருப்பு ஆடுகளை களையெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அடையாளம் கண்டு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் விற்பனையில் நடைபெறும் அவலம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்பதே குடிமகன்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் டாஸ்மாக் பிரச்னையை அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும்.  மேலும் பல அதிர்ச்சி தகவல் புதைந்துள்ளன தொடரும்...

Label