OUR CLIENTS
உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் ரூ.16 கோடி நிலம் மீட்பு
உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் ரூ.16 கோடி நிலம் மீட்பு Posted on 26-Jun-2017 உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் ரூ.16 கோடி நிலம் மீட்பு

திருவள்ளுர், ஜூன் 26-
திருவள்ளுர் பெரியகுப்பம் ராஜாஜிபுரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் 11 ஆயிரம் சதுரஅடி இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தை மீட்டுதர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்தனர். இதைதொடர்ந்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் (Tamil Nadu Local Bodies Ombudsman) சோ. அய்யர் அவர்கள் முறையான விசாரணை நடத்தி  உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தார்.  இதை தொடர்ந்து சிறுவர் பூங்காவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போடப்பட்டிருந்த வேலியை அகற்றி நிலத்தை மீட்டனர். அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.16 கோடியாகும்.  

இதேபோன்று அன்மையில் சென்னையில் வளரசவாக்கம் பகுதியில் உள்ள ராயலா நகரில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட பூங்கா, சமுதாயக்கூடங்களுக்கான இடங்களை தனியார் ஆக்கிரமித்து இருந்தார்கள். இந்த புகாரை விசாரித்து சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான இடங்களை மீட்டு மாநகராட்சியிடம் நடுவம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

சில இடங்களில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வந்ததாக புகார்களை விசாரித்து சாலைகளை போட வைத்திருக்கின்றனர். பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு தாமதமின்றி பணம் பட்டுவாடா செய்ய வைத்தது, உள்ளாட்சி அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட பல தீர்வுகளை கண்டிருக்கும் நடுவம், உள்ளாட்சிகளுக்கு வருவாய் மற்றும் நிதியிழப்பை ஏற்படுத்தியிருப்பதற்காக மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாக அலுவலருக்கு ரூ.35 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் 3 அலுவலர்களுக்கு ரூ.12.5 லட்சம் ரொக்க வரி போட்டிருக்கிறது. 

அதேவேளை தவறான புகாரை தெரிவித்த சிலர் எச்சரிக்கப்பட்டு அவர்களிடம் வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
உள்ளாட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் சம்மந்தப்பட்ட எந்த புகாராக இருந்தாலும நடுவத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கலாம். படிவம் 1ஐ பூர்த்தி செய்து அத்துடன் ரூ.10க்கான நீதிமன்ற வில்லையுடன் புகாரையும் இணைத்து சென்னையில் கதவிலக்கம் 100, அண்ணாசாலை, கிண்டி என்ற முகவரியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் அருகில் செயல்படும் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். ஆவணங்கள், சாட்சிகள் இருந்தால் அவற்றையும் இணைக்கலாம். புகார்கள் மீது உரிமையியல் நீதிமன்ற விதிகளின்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கும், குறைகளையும் உரிய விசாரணையை முறைமன்ற நடுவர் முனைவர் சோ. அய்யர் அவர்கள் சிறப்பாக உடனுக்குடன் தீர்வு காண்கின்றார் என்று பொதுமக்கள் சிறப்பாக கூறிவருகின்றனர். 
எளியவர்களும் எளிதாக நாடாலாம் தொடர்புக்கு :
தொ.எண்:  044-22201337 
மின்னஞ்சல்
ombudsmanlocal@tn.gov.in
இணையதளம்
www.tnlbo.tn.gov.in

Label