OUR CLIENTS
பாஜக ஆதரவு - ஜெயலலிதா வழியில் எடுக்கப்பட்ட முடிவு
பாஜக ஆதரவு - ஜெயலலிதா வழியில் எடுக்கப்பட்ட முடிவு Posted on 27-Jun-2017 பாஜக ஆதரவு - ஜெயலலிதா வழியில் எடுக்கப்பட்ட முடிவு

சென்னை, ஜூன் 27-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் குடியரசுத் தலைவர்  தேர்தலில் என்ன முடிவை எடுத்திருப்பாரோ அதையே அதிமுக அணிகள் எடுத்திருக்கின்றன என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

உசிலம்பட்டியில் நேற்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் இப்பொழுது ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவை எடுத்திருப்பாரோ அதையே தற்போது அதிமுகவின் அணிகள்  எடுத்திருக்கின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணைய முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அதிமுக இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. இவ்வாறு செய்தியாளர்களிடம் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Label