OUR CLIENTS
திமுகவில் இணையவிருக்கும் விந்தியா?
திமுகவில் இணையவிருக்கும் விந்தியா? Posted on 27-Jun-2017 திமுகவில் இணையவிருக்கும் விந்தியா?

சென்னை, ஜூன் 27-
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க-வின் பிரசார பீரங்கியாகத் தமிழகம் முழுவதும் வலம் வந்தவர் நடிகை விந்தியா. அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளரான விந்தியாவின் அதிரடி பேச்சைக் கேட்டு ரசித்த ஜெயலலிதா சிலமுறை போயஸ் கார்டனுக்கு அழைத்து பாராட்டியிருக்கிறார்.

பலமுறை போனில் அழைத்து புகழ்ந்திருப்பதாகவும் தகவல் வெளியானதுண்டு. ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது பலமுறை மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்தவர் விந்தியா. ஜெயலலிதா மறைந்தபோது ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தியதோடு அரசியல் வட்டத்தில் இருந்து சிலகாலம் காணாமல் போனார். 

இதனிடையே விந்தியாவின் அதிரடி பேச்சுத் திறமையை பயன்படுத்திக் கொள்ள தினகரன் அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் மாறிமாறி விந்தியாவை அழைத்துப் பார்த்தது, ஆனால் வர் மௌனம் காத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் ஸ்டாலின் தரப்பிலிருந்து தி.மு.க-வில் இணையச்சொல்லி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 'உங்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும், பிரசாரத்தின்போது முழு பாதுகாப்புக் கொடுக்கப்படும்' என்று வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன.

ஆனால் தி.மு.க-வில் சேர்ந்த குஷ்புவுக்கு நேர்ந்த கதி தனக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தோடு விந்தியா ஆலோசனை செய்துவருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி கூடிய விரைவில் விந்தியாவிடம் இருந்து சாதகமான பதில் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

Label