OUR CLIENTS
தருமபுரியில் புத்துயிர் பெறாத சிலம்பாட்ட கலைகள் தமிழர்களின் பாரம்பரியம் அழியும் அவலம் தொடருது!பயிற்சியாளர்கள் புலம்பும் பரிதாபம்!
தருமபுரியில் புத்துயிர் பெறாத சிலம்பாட்ட கலைகள் தமிழர்களின் பாரம்பரியம் அழியும் அவலம் தொடருது!பயிற்சியாளர்கள் புலம்பும் பரிதாபம்! Posted on 28-Jun-2017 தருமபுரியில் புத்துயிர் பெறாத சிலம்பாட்ட கலைகள் தமிழர்களின் பாரம்பரியம் அழியும் அவலம் தொடருது!பயிற்சியாளர்கள் புலம்பும் பரிதாபம்!

தருமபுரி, ஜூன் 28-
தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பாட்ட கலைகள் தருமபுரி மாவட்டத்தில் புத்துயிர் பெறாமல் அழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்ட சிலம்பம் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம் இணைந்து சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மாநில போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது. தருமபுரி அருகே அதியமான்கோட்டை மேல்நிலை பள்ளியில் நடந்த இத்தேர்வில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என மொத்தம், 146 பேர் கலந்துகொண்டனர். இதில், 15 வீராங்கனைகள் உட்பட, 57 பேர் தேர்வாகினர். 

மாநில போட்டியில், சப்&ஜூனியர் பிரிவில், 12 முதல் 14 வயதுக்குட்டவர்களும், ஜூனியர் பிரிவில், 15 முதல், 17 வயதுடையவர்களும், சீனியர் பிரிவில், 18 முதல், 20 வயதுக்குட்டவர்களுக்கு, 8 வகையான எடை பிரிவில் சிலம்பாட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் சிலம்பாட்ட கலைகள் அழிந்து வருகிறது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட சிலம்பம் சங்கத்தின் செயலாளர் பாரதிராஜா கூறியபோது: தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பாட்ட கலைகள் அழிந்துவிடாமல் இருக்க பல மாவட்டங்களில் பாதுகாத்து வருகின்றனர். இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை போன்ற மாவட்டங்கள் முன்னோடியாக திகழ்கின்றன. மேலும் தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானங்களில் திறமைமிக்க நல்ல பயிற்ச்சியாளர்களை கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநில போட்டியிலும் இந்த மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் மட்டுமே வெற்றிபெறுகின்றனர்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அதிகளவு நடத்தப்படுகிறது. இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆர்வம் கிட்டுகிறது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ சிலம்பாட்ட போட்டிகள் நடத்தவில்லை. இதற்காக அரசும், தனியார் அமைப்புகளும் முன்வராததே காரணம் என்றார்.

தருமபுரியில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு அரசு சார்பில் சிலம்பாட்டத்துக்கென ஒரு பயிற்சியாளரும் இல்லை. தனியார் அமைப்புகள் மட்டுமே மாவட்டத்தில் பரவலாக உள்ளனர். ஆனால் சிலம்பாட்ட கலைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் வீரர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலேயே தற்காப்பு கலைகள் என கராத்தே கற்றுத்தரப்படுகிறது. தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் கற்றுத் தரப்படுவதில்லை. பொதுவாக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்படும் சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நேஷ்னல், ஒலிம்பிக்கில்  இடம்பெற வேண்டும் என்பது தங்களின் பல ஆண்டு கோரிக்கையாகவே உள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் பாரம்பரியமான சிலம்ப கலைகளில், 32 வகையான சிலம்பு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  ஆனால் தற்போது முழுவதும் அழிந்துவிடும் அவலம் ஏற்பட்டுள்ளதாக ஆதங்கத்தை தெரிவித்தார். 

தமிழக அரசு அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதுபோல், சிலம்பாட்ட கலைகளுக்கும் முக்கியத்தும் அளித்து அனைத்து பள்ளிகளிலும் தற்காப்பு கலையாக பயிற்சி அளிக்கவேண்டும். மேலும் விழிப்புணர்வு செய்து இந்த கலை அழியாமல் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Label