OUR CLIENTS
துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி
துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி Posted on 09-Aug-2016 துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

6 சுற்றுகள் கொண்ட இதில் அபினவ் பிந்த்ரா 625.7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் அபினவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இத்தாலி வீரர் நிக்கோலா சம்ப்ரியானி 630.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையையும் பதிவு செய்தார்.

ரஷிய வீரர் 629 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், குரோஷிய வீரர் 628 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், உக்ரைன் வீரர் 627 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், 626.2 புள்ளிகளுடன் மற்றொரு உக்ரைன் வீரர் 5-வது இடத்தையும், ஹங்கேரி வீரர் 625.9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், பல்கேரிய வீரர் 625.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர்.

ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நடைபெற்றது.

Label