OUR CLIENTS
சிறுதாவூர் பங்களா அருகே காவலாளி எலும்புக்கூடு கண்டெடுப்பு
சிறுதாவூர் பங்களா அருகே காவலாளி எலும்புக்கூடு கண்டெடுப்பு Posted on 28-Jun-2017 சிறுதாவூர் பங்களா அருகே காவலாளி எலும்புக்கூடு கண்டெடுப்பு

சென்னை, ஜுன் 28-
கோடநாடு பங்களா காவலாளி கொலையை தொடர்ந்து, சிறுதாவூர் பங்களா அருகே காவலாளி  உடையுடன் எலும்புக் கூடு கண்டெக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே ஓடையின் முட்புதரில் ஒரு எலும்புக் கூடு கிடப்பதாக, திருப்போரூர் போலீசாருக்கு அந்தப் பகுதி தகவல் கொடுத்தனர். இதுகுறித்து மகாபலிபுரம் போலீசில் புகார் தெரிவிக்குமாறு,  திருப்போரூர் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, மகாபலிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, எலும்புக்கூட்டை கைப்பற்றினர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எலும்புக்கூடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எலும்புக் கூட்டின் அருகே காவலாளி உடை இருப்பதால், காவலாளி கொலை செய்யப்பட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், எலும்புக் கூடு அருகே சில்லறை அதிகளவு கிடந்ததால், பிச்சைக்காரராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர். 

கோடநாடு பங்களா காவலாளி கொலையின் மர்மம் இன்னும் விலகாத நிலையில், சிறுதாவூர் பங்களா அருகே எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

Label