OUR CLIENTS
கல்விக் கடன் வழங்க வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
கல்விக் கடன் வழங்க வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு Posted on 28-Jun-2017 கல்விக் கடன் வழங்க வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 28-
கல்விக் கடன் வழங்க வங்கிகள் முன் வர வேண்டும், சிறிய காரணங்கள் கூறி மறுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியை சேர்ந்த எஸ்.சம்பத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:  

நான் பிளஸ் 2 முடித்து மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பித்தேன். எனக்கு மும்பையில் தரேன் மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனவே மருத்துவ படிப்புக்கு ரூ.25 லட்சம் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு விண்ணப்பித்தேன்.  இதற்காக எனது தந்தையின் பெயரில் உள்ள விவசாய நிலத்தை அடமானமாக கொடுத்தேன். இததை ஏற்க வங்கி மறுத்துவிட்டது. எனவே எனக்கு கல்வி கடன் தர வங்கிக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்.   இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
  
இந்த மனுவை நீதிபதி புஸ்பா சத்தியநாராயணன் விசாரித்து, மாணவனுக்கு கல்வி கடன் ரூ.25 லட்சத்தை வங்கி உடனே தர வேண்டும். விவசாய நிலத்தின் மீது ரூ.25 லட்சம் கடன் தர முடியாது என்று வங்கி மறுக்க கூடாது. அனைத்து ஆவணங்களையும் மாணவன் தர தயராக உள்ளார். எதிர்காலத்தில் பணத்தை திரும்ப மாணவன் தராவிட்டால் வங்கி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம். பல்வேறு சலுகைகளை வங்கிகள் அறிவிக்கிறது. 

இதை ஒரு முக்கிய வழக்காக வங்கி கருதி உரிய முறையில் மாணவன் கல்விக்கு கடன் வழங்க வேண்டும்.  
மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுத்து வங்கிகள் கல்வியை ஊக்க விக்க வேண்டும். சிறிய காரணம் கூறி கல்வி கடன் வழங்க வங்கிகள் மறுக்க கூடாது. உயர் கல்வியை வங்கிகள் ஊக்குவிப்பது நோக்கமாக கருத வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Label