OUR CLIENTS
கோக், பெப்சிக்கு எதிரான மனு தள்ளுபடி
கோக், பெப்சிக்கு எதிரான மனு தள்ளுபடி Posted on 28-Jun-2017 கோக், பெப்சிக்கு  எதிரான மனு தள்ளுபடி

மதுரை, ஜூன் 28-
தாமிரபரணியில் இருந்து நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தற்பொழுது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும், தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

எனவே, தாமிரபரணி ஆற்றிலிருந்து கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் பெப்சி, கோகோகோலா உள்ளிட்ட 25 தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், வேல்முருகன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தொழிற்சாலைகளுக்கு தடையில்லை எனக் கூறி, தண்ணீர் வழங்க தடை கோரிய தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Label