OUR CLIENTS
நாமக்கல்லில் மேம்பாலத்தின் தொங்கும் தூண் வைரல் விடியோவைத் தொடர்ந்து நடவடிக்கை!
நாமக்கல்லில் மேம்பாலத்தின் தொங்கும் தூண் வைரல் விடியோவைத் தொடர்ந்து நடவடிக்கை! Posted on 28-Jun-2017 நாமக்கல்லில் மேம்பாலத்தின் தொங்கும் தூண் வைரல் விடியோவைத் தொடர்ந்து நடவடிக்கை!

நாமக்கல், ஜூன் 28-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிரமணி மேம்பாலத்தின் 3 தூண்களில் ஒன்று, கீழே நிலப்பரப்பில் எந்த பிடிமானமும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருந்தது தொடர்பான விடியோ வைரலாகப் பரவியது.

இதையடுத்து, விடியோவில் குறிப்பிட்ட அந்த தூணை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விடியோ சமூக தளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் மூத்த அதிகாரிகள், அந்த பகுதியை சனிக்கிழமை பார்வையிட்டனர். காவிரி ஆற்றின் மீது கடந்த 2013ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த தடுப்பணை மற்றும் மேம்பாலத்தில் மொத்தம் 21 மதகுகளும், தலா 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 மின் உற்பத்தி நிலையங்களும் அமைந்துள்ளன.

இந்த ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்தால் மட்டுமே மின் உற்பத்தி தொடங்கும். வறட்சி காரணமாக தற்போது அந்த தடுப்பணை அருகே நீர் வரத்து இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பாலத்துக்குக் கீழே சென்ற பொதுமக்களில் சிலர், அந்த பாலத்தின் ஒரு தூணை சுற்றியிருந்த மண் அரிக்கப்பட்டு, தரைப்பகுதியில் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து உடனடியாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதோடு, இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய அவர்கள், அதனை சமூக தளத்திலும் பதிவேற்றினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை, சமூக தளத்தில் இந்த விடியோ வைரலாகப் பரவியது. வழக்கமாக தண்ணீர் வற்றும் போது, இங்கே பராமரிப்புப் பணிகள் நடப்பது வழக்கம்தான்.  ஹஇந்த பாலத்தை ஆராய்ந்த போது, 
தூணின் கான்க்ரீட் பகுதி பலத்த சேதமடைந்திருப்பதை அறிந்தோம்.  உடனடியாக பராமரிப்புப் பணியைத் தொடங்கினோம் என்கின்றனர் பொதுப் பணித் துறை மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள்.

இது குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சேதம் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டதா அல்லது கட்டுமானப் பணியில் ஏற்பட்ட குளறுபடியால் நேரிட்டதா என்பது  குறித்து ஆராய விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Label