OUR CLIENTS
பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்!
பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்! Posted on 28-Jun-2017 பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்!

வேலூர், ஜூன் 28-
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (ஜூன் 29ஆம் தேதி) ஏலத்தில் விடப்பட உள்ளன.

இதுகுறித்து எஸ்.பி. பொ.பகலவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டம் முழுவதிலும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர, ஆட்டோ ஆகிய வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. 

இவற்றை ஏலம் எடுக்க விரும்புவோர் ரூ. 50 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏலத் தொகையுடன் 14.5 சதவீத விற்பனை வரியையும் செலுத்த வேண்டும். இதற்கு ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்துக்கான ரசீது தான் அந்த வாகனத்துக்கான ஆவணமாகும்.

மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label