OUR CLIENTS
மகளிர் உரிமைகள் கழகம் ஆர்ப்பாட்டம்!
மகளிர் உரிமைகள் கழகம் ஆர்ப்பாட்டம்! Posted on 28-Jun-2017 மகளிர் உரிமைகள் கழகம் ஆர்ப்பாட்டம்!

பூந்தமல்லி, ஜூன் 28-
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த இந்து கல்லூரியில் நடந்த முறைகேடுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த பகுதியில் படிப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் படிப்பதற்காக இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் நிலங்களையும், பணத்தையும் கொடுத்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தையும் சேர்த்து கட்டிய கல்லூரி இது. ஆனால் இப்போது இவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை. இவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் இவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை. 

முதலில் யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தான் சீட் என்று இதன்  நிர்வாகம் கூறுகிறது. இதை கண்டித்து ஆவடியில் அண்ணா சிலை அருகில் மகளிர் உரிமைகள் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ம.உ.க.தலைவி கல்பனா மற்றும் சத்தியமூர்த்தி, சார்லஸ், மலேசியாவில் ஐ.பி.எஸ்.பயிலும் திருநங்கை ரோசி கண்டன உரை நிகழ்த்தினர். இவர்களுடன் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

Label