OUR CLIENTS
ஈரோட்டில் 30ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!
ஈரோட்டில் 30ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்! Posted on 28-Jun-2017 ஈரோட்டில் 30ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு, ஜூன் 28-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ மற்றும டிப்ளமோ படித்து முடித்தவர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது. தனியார் துறையில் இம்முகாம் வாயிலாக பணியமர்த்தப்படுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் வேலையளிப்போர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

Label