OUR CLIENTS
செங்கம் பகுதியில் மிரட்டும் மர்மக் காய்ச்சல் கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை!
செங்கம் பகுதியில் மிரட்டும் மர்மக் காய்ச்சல் கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை! Posted on 28-Jun-2017 செங்கம் பகுதியில் மிரட்டும் மர்மக் காய்ச்சல் கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை!

செங்கம், ஜூன் 28-
செங்கம்; சுற்று வட்டார கிராமங்களில் மர்ம காய்ச்சல் மிரட்டி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளமல் அலட்சியம் காட்டி வருகின்றது.

செங்கம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் புளியம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்;. அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. மாறாக அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காய்ச்சல் தீவிரமானது. இதைத்தொடர்ந்து அவர்கள் தனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இதனை தொடர்ந்து மல்லிகாபுரம் மேல்பென்னாத்தூர், கரியமங்கலம், உச்சிமலைகுப்பம், சொர்பனந்தல் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதில் குழந்தைகள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம் காட்டுவதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்ட துணை இயக்குனர் மீரா ஆய்வு செய்தபோது, ஊராட்சியில் அடிப்படை வசதியில்லை .குப்பை கூலங்களாக உள்ளது. ஊரக வளர்ச்சி துறை மீது குற்றம் சாட்டி வருகின்றனர். சுகாதார துறையும் ஊரக வளர்ச்சி துறையும் மாறி மாறி குறை வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர் சுகாதாரத் துறையினர் அலட்சியமே இதற்கு காரணம் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளோம்.

 எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சுகாதாரத் துறையினர் செங்கம் சுற்று வட்டார கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கிராமத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பாதிப்பால் கிராம மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

Label