OUR CLIENTS
எல்லை தாண்டி வந்தது இந்திய வீரர்கள் தான் சீனா குற்றச்சாட்டு
எல்லை தாண்டி வந்தது இந்திய வீரர்கள் தான் சீனா குற்றச்சாட்டு Posted on 28-Jun-2017 எல்லை தாண்டி வந்தது இந்திய வீரர்கள் தான் சீனா குற்றச்சாட்டு

பீஜிங், ஜூன் 28-
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்ச பிரதேசம், சிக்கிம் மாநிலம் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் நேற்று முன்தினம் குற்றம்சாட்டியது.  இந்நிலையில், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஷாங் வெளியிட்டு இருந்த அறிக்கையில், சீக்கிம் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தான் ஊடுருவி வந்ததாக தெரிவித்தார்.மேலும், “எல்லையில் சீன வீரர்களால் நடத்தப்படும் சதாரண நடவடிக்கைகளுக்கும் இந்திய வீரர்கள் இடையூறு செய்கின்றனர். எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடத்த வேண்டும். 

இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்த சீனா முன்முனைப்போது உள்ளது. இரண்டு தரப்பினரும் இணைந்து எல்லையில் சுமூகமான நிலையை தொடர வேண்டும்.” என்று அவர் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

Label