OUR CLIENTS
ஓரின சேர்க்கையாளர்களின் பேரணியில் பிரதமர் தனிமனித சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கனடா
ஓரின சேர்க்கையாளர்களின் பேரணியில் பிரதமர் தனிமனித சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கனடா Posted on 28-Jun-2017 ஓரின சேர்க்கையாளர்களின் பேரணியில் பிரதமர் தனிமனித சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கனடா

கனடா, ஜூன் 28-
ஓரின சேர்க்கை யாளர்களின் பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ அவரது குடும்பத்தினருடன் பங்கேற்று அங்குள்ள ஓரினசேர்க்கையாளர்களுடன் அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஓரின சேர்க்கை யாளர்களின் உரிமைகளை மதிக்கும் வண்ணமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் யூன் மாதம் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த world pride week நிகழ்ச்சியானது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இதற்கு பெரிய அளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்க டிரம்ப் தவறிவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கனடாவில் பிரதமரே ஓரின சேர்க்கையாளர்கள் உரிமை பாதுகாப்பு பேரணியில் பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது அவர் ஓரின சேர்கைகயாளர்கள் பயன்படுத்தும் அடையாள குறியீடான வானவில் வர்ண சாக்ஸ் அணிந்திருந்த்தும், அவருடைய கன்னங்களில் வண்ண இலைபோல் வரைந்திருந்ததும் ஓரின சேர்க்கையாளர்கள் மட்டு மல்லாது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பேரணி குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் ''அன்பென்றால் அன்பு '' என்று ஜஸ்டின் குறிப்பிட்டிருந்ததும் வைரல் ஆகியுள்ளது.

Label