OUR CLIENTS
சீனாவின் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடக்கம்
சீனாவின் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடக்கம் Posted on 28-Jun-2017 சீனாவின் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடக்கம்

பெய்ஜிங், ஜூன் 28-
சீனாவில் ஒரு மணி நேரத்தில் 400கிமீ செல்லக்கூடிய புல்லட் ரயில்   பெய்ஜிங் & ஷாங்காய் தடத்தில் தன் முதல் பயணத்தை தொடங்கியது.

ஃப்யூக்சிங்  சிஆர்400 ஏஃப் ரக புல்லட் ரயில், பெய்ஜிங் தெற்கு ரயில் நிலையத்தில் இருந்து 5,05,000 பயணிகளுடன்   காலை 11.05 மணியளவில் ஷாங்காய்க்கு புறப்பட்டது. இந்த புல்லட் ரயில் 5.45 மணி நேரத்தில் ஷாங்காய் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் ஜினான், ஷண்டாங் மாகாணம், தியான்ஜின் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு வந்தது. 

இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் அதிகமாக 400கிமீ தூரம் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. அதேபோல் ஒரு மணிநேரத்தில் சராசரியாக 350கிமீ நிலையான வேகத்தில் செல்லக்கூடியது என்று சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள தொழிநுட்பத்தின் மூலம் தொடர்ந்து ரயிலின் செயல்திறன் கண்காணிக்கப்பட்டு வரும். அவசர மற்றும் அசாதாரண நிலையில் ரயில் தானாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை சீனாவே முழுமையாக வடிவமைத்து உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label