OUR CLIENTS
குட்கா உரிமையாளர்களிடம் அமைச்சர், அதிகாரிகள் லஞ்சம் குறித்து முதல்வர் பதில் திருப்தியில்லை என திமுக வெளிநடப்பு
குட்கா உரிமையாளர்களிடம் அமைச்சர், அதிகாரிகள் லஞ்சம் குறித்து முதல்வர் பதில் திருப்தியில்லை என திமுக வெளிநடப்பு Posted on 29-Jun-2017 குட்கா உரிமையாளர்களிடம் அமைச்சர், அதிகாரிகள்  லஞ்சம்  குறித்து  முதல்வர் பதில் திருப்தியில்லை என திமுக வெளிநடப்பு

சென்னை, ஜூன் 29
குட்கா உரிமையாளரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அமைச்சர் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விஷயத்தில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அளித்த பதில் திருப்தி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

குட்கா உரிமையாளர்களிடம் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ரூ. 56 லட்சம் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை ஒரு கடிதத்தை வழங்கியது. இதனை நேற்று சட்டப்பேரவையில் காண்பித்து இந்த விஷயம் குறித்து விவாதிக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சபாநாயகர் தனபால் அதனை மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரிகள் லஞ்சம் பெற்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உறுப்பினர்கள் பேரவையில் வைத்தனர்.

இதற்கு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறி மறுத்துவிட்டார். முதல்வர் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Label