OUR CLIENTS
உலகின் அதிவேக ரெயில் சேவை: சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்
உலகின் அதிவேக ரெயில் சேவை: சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம் Posted on 09-Aug-2016 உலகின் அதிவேக ரெயில் சேவை: சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்

சீனா:
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள செங்சு நகரை கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துடன் இணைக்கும் இந்த அதிவேக ரெயில் சேவையின் மூலம் இருமுனைகளுக்கும் இடையிலான முந்தைய இரண்டரை மணிநேர பயணம் இனி 80 நிமிடங்களாக குறையும்.


சோதனை ஓட்டத்தின்போது இந்த ரெயில் அதிகபட்ச வேகமான மணிக்கு 400 கிலோமீட்டர் என்ற இலக்கை எட்டியதாக தெரிகிறது.

அதிவேக ரெயில்களின் இயக்கத்துக்கு என சுமார் 16 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்ட தண்டவாள வழிதடத்தை சீனா அமைத்துள்ளது. இந்தப் பாதை வழியாக நடைபெற்ற ரெயில் போக்குவரத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சீனாவிற்கு 100 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வகையிலான அதிவேக ரெயில்களை இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, சென்னை - டெல்லி இடையே ரெயில் தடம் அமைக்க சீனா ஆய்வு நடத்தியுள்ளது, நினைவிருக்கலாம்.

Label