OUR CLIENTS
ஜி 20 நாடுகளின் மாநாட்டில் தீவிரவாத ஒழிப்பு குறித்து முக்கிய ஆலோசனை
ஜி 20 நாடுகளின் மாநாட்டில் தீவிரவாத ஒழிப்பு குறித்து முக்கிய ஆலோசனை Posted on 01-Jul-2017 ஜி 20 நாடுகளின் மாநாட்டில் தீவிரவாத ஒழிப்பு குறித்து முக்கிய ஆலோசனை

புதுதில்லி, ஜூலை 1-
பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு வரும் ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்பட 19 நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து தீவிரவாதம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 7ம் தேதி காலை இரண்டு மணி நேரம் தீவிரவாதம் குறித்து 20 நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளதாக ஜி 20 உச்சிமாநாட்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Label