நிலவுக்கு போகும் இறந்தவர்களின் சாம்பல் : அமெரிக்க இந்தியரின் புதிய முயற்சி Posted on 09-Aug-2016
வாஷிங்டன்:
அமெரிக்க வாழ் இந்தியரான நவீன் ஜெயின், மற்றவர்களுடன் இணைந்து 2010-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமானது இறந்து போன மனிதர்களின் சாம்பலை நிலவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
நிலவுக்கு செல்வதற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
தனது இந்த முய்ற்சி குறித்து நியூயார் டையம்ஸ் நாளிதலுக்கு நவீன் ஜெயின் அளித்துள்ள பேட்டியில் “ ஒரு கிலோ மனித சாம்பலுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனேவே நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.