OUR CLIENTS
வண்ணமயமான மேகத்தை செயற்கையாக உருவாக்கிய நாசா
வண்ணமயமான மேகத்தை செயற்கையாக உருவாக்கிய நாசா Posted on 03-Jul-2017 வண்ணமயமான மேகத்தை செயற்கையாக உருவாக்கிய நாசா

நியூயார்க், ஜூலை 3-
அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சி மையமான  நாசா, வண்ணமயமான மேகத்தை செயற்கையாக உருவாக்கி உள்ளது. 

அயனி மண்டலம் மற்றும் அரோரா ஒளி தொடர்பான ஆய்வுக்காக இந்த செயற்கை மேகத்தை நாசா உருவாக்கியது.வெர்ஜினியா மாகாணத்தில் நாசாவுக்கு சொந்தமான ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட ராக்கெட், நீலப்பச்சை மற்றும் சிவப்பு வண்ண ரசாயன கலவையை வெளியேற்றியது.

இந்த கலவை வானில் வண்ணமயமான செயற்கை மேகமாக உருமாறி, நியூயார்க் -& நார்த் கரோலினா நகரங்களுக்கு இடையிலான வான்வெளியில் தோன்றியது. ரசாயன கலவையால் சுற்றுச் சூழல் பாதிக்காது என்று கூறிய நாசா, சூரிய ஒளியினால் ஏற்படும் மாற்றங்களையும், நகர்வையும் பூமியிலிருந்து இதன்மூலம் ஆய்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்தது.

Label