OUR CLIENTS
அதிசக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகும் சீனா
அதிசக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகும் சீனா Posted on 03-Jul-2017 அதிசக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகும் சீனா

சீனா, ஜுலை 3-
அதிசக்தி வாய்ந்த ராக்கெட்டை ஞாயிறு அன்று விண்ணில் செலுத்த சீனா தயாராகி வருகிறது. விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் சீனா, கடந்த ஆண்டு முதல்முறையாக அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி சாதனைப் படைத்தது.

இந்நிலையில், அதிக எடையை சுமக்கும், லாங் மார்ச் 5 ஒய் 2 ((long march 5 y2)) என்ற இரண்டாவது ராக்கெட்டை சீனா உருவாக்கி உள்ளது. 25 டன் வரையிலான பொருட்களுடன் விண்ணில் பாயும் ஆற்றல் உடைய இந்த ராக்கெட், ஹைனன் மாகாணத்தில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்பில் விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் சீனாவின் லட்சிய திட்டத்திற்கு இந்த ராக்கெட் பெரிதும் உதவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

Label