OUR CLIENTS
உலகின் அசிங்கமான நாய் மகுடம் சூடியது மார்த்தா
உலகின் அசிங்கமான நாய் மகுடம் சூடியது மார்த்தா Posted on 03-Jul-2017 உலகின்  அசிங்கமான நாய் மகுடம் சூடியது மார்த்தா

கலிபோர்னியா, ஜூலை 3-
பொதுவாக அழகைத்தான் ஆராதிப்போம். நாய்கள் கண்காட்சியில் கூட அழகான, புத்திசாலி நாய்க்குதான் பரிசு கிடைக்கும். 

ஆனால் இந்த விதியை மாற்றி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெட்டலுமாவில் 29 ஆண்டாக உலகின் அசிங்கமான நாய் போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டு 13 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் மார்த்தா எனப்படும் நியோபோலிடன் மாஸ்டிப் வகையை சேர்ந்த நாய், அசிங்கமான நாயாக மகுடம் சூடியது.

 தாடையில் சதை தொங்கும் இந்த நாய், காப்பகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பார்வையின்றி இருந்த மார்த்தாவுக்கு பல அறுவைசிகிச்சைக்கு பின் தற்போது ஓரளவு பார்வையுடன், எந்த வலிகளுமின்றி இருப்பதாக அதன் உரிமையாளர் சின்ட்லர் கூறி உள்ளார். 

வெற்றி பெற்ற மார்த்தாவுக்கு 1500 டாலர் (கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம்) பரிசும், நியூயார்க் நகருக்கு இன்பச் சுற்றுலாவும் வெகுமதியாகவும் வழங்கப்பட்டுள்ளது. நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இப்போட்டி நடத்தப்படுவதாக கூறுகின்றனர்.

Label