OUR CLIENTS
இந்தியா &- சீனா இடையே போர் அபாயம்! பதிலடி கொடுக்க தயார் & ஜெட்லி
இந்தியா &- சீனா இடையே போர் அபாயம்! பதிலடி கொடுக்க தயார் & ஜெட்லி Posted on 04-Jul-2017 இந்தியா &- சீனா  இடையே போர் அபாயம்! பதிலடி கொடுக்க தயார் & ஜெட்லி

பெய்ஜிங், ஜூலை 4-
சிக்கிம் எல்லைப் பிரச்சினை சுமுகமான முறையில் கையாளப்படாவிட்டால், இந்தியா-சீனா இடையே போர் மூளலாம் என்று சீன நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

சிக்கிம் எல்லையில் உள்ள டாக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை சீனா தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இதனால், இந்தியா-சீனா எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தியா&சீனா இடையேயான பிரச்சினை சரியான முறையில் கையாளப்படாவிட்டால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளலாம் என்று சீனாவைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் சொல்லியிருப்பதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாங்காய் சர்வதேச கல்வி நிலைய பேராசிரியர் வாங் தெகுவா இந்தியா-சீனா பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்து இருப்பதாவது: 1962ல் இருந்த இந்தியா அல்ல 2017ம் ஆண்டைய இந்தியா என்று இந்திய ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். சீனாவும் அதே போல் தான். அப்போதைய சீனாவுக்கும் இப்போதைய சீனாவுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன.

1962ம் ஆண்டில் இருந்து இந்தியா சீனாவை தனது போட்டியாளராக கருதி வருகிறது. ஆனால், இருநாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக, இருநாடுகளும் வளரும் நாடுகளாக உள்ளன. இருநாடுகளிலும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. இவ்வாறு வாங் தெகுவா கூறியுள்ளார்.

1962ம் ஆண்டு சீன பகுதியை ஆக்கிரமித்ததற்கு எதிராக நடந்த இந்தியா-சீனா போரில் சீன வீரர்கள் 722 பேரும் இந்திய வீரர்கள் 4,383 பேரும் இறந்ததாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் குளோபல் டைம்ஸ் வலியுறுத்தியுள்ளது.  சீனாவுடன் விரோதப் போக்கை கடைபிடிப்பதை இந்தியா கைவிட வேண்டும் என்றும் இருநாடுகளும் போர் மனநிலையை கைவிட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஷாங்காய் சர்வதேச கல்விநிலையத்துக்கு உட்பட்ட ஆசிய-பசிபிக் கல்வி பிரிவின் இயக்குனர் ஸாவோ கன்செங் கூறியுள்ளார்.

Label