OUR CLIENTS
2019 பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காது முதல்வர் ஆதித்யநாத் ஆரூடம்
2019 பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காது முதல்வர் ஆதித்யநாத் ஆரூடம் Posted on 04-Jul-2017 2019 பாராளுமன்ற தேர்தலில்  உ.பி.யில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காது முதல்வர் ஆதித்யநாத் ஆரூடம்

லக்னோ, ஜூலை 4-
2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று அந்த மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சக்தியாக இருந்து வந்தது. நாளடைவில் இதன் செல்வாக்கு சரிந்து இப்போது இந்த கட்சி மாநிலத்தில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.  கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைத்தது.

  2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று அந்த மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான அப்னாதளம் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய யோகிஆதித்யநாத் இவ்வாறு கூறினார். 

மேலும் அவர் கூறியதாவது:-  இன்று காங்கிரஸ் கட்சியை விட அப்னாதளம் பெரிய கட்சியாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 2 எம்.பி.க்கள் தான் உள்ளனர். அப்னாதளத்துக்கும் 2 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு இங்கு 7 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர்.

 ஆனால் அப்னாதளத்துக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.  இதை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியை விட அப்னாதளம் பெரிய கட்சியாக மாறி இருக்கிறது. வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு உத்தரபிரதேசத்தில் ஒரு இடம்கூட கிடைக்காது.  இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

Label