OUR CLIENTS
சோனியா குடியுரிமை தகவல் தர உத்தரவு
சோனியா குடியுரிமை தகவல் தர உத்தரவு Posted on 06-Jul-2017 சோனியா குடியுரிமை தகவல் தர உத்தரவு

புதுடெல்லி, ஜூலை 6-
காங். தலைவர் சோனியாவின் இந்திய குடியுரிமை பற்றி உஜ்ஜைனியைச்சேர்ந்த ஒருவர்  வெளிவிவகார அமைச்சகத்திடம்  தகவல்கள் கேட்டிருந்தார். 

அவரது விண்ணப்பம், அதற்காக சமர்ப்பித்த ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், அறிவிக்கை, விதிகள், சோனியாவுடன் நடந்த கடிதத் தொடர்பு நகல்கள், ஆய்வு நடைமுறை விளக்கங்கள் தரவேண்டும் என்று கோரி இருந்தார். 

இந்த கடிதத்தை உள்துறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மனுதாரருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே  தலைமை தகவல் ஆணையரிடம் மனுதாரர் முறையிட்டார்.  இதையடுத்து சோனியாவின் இந்திய குடியுரிமை பற்றிய தகவல்களை மனுதாரருக்கு அளிக்கும்படி உள்துறைக்கு தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Label