OUR CLIENTS
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்பு
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்பு Posted on 07-Jul-2017 புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்பு

புதுடெல்லி, ஜூலை 7-
நஜீம் ஜைதி ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 21-வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நேற்று பதவியேற்றார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த நஜீம் ஜைதிக்கு 65 வயது ஆனதால், அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அச்சல் குமார் ஜோதி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். 

டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், நஜீம் ஜைதி நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து  21-வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

64 வயதாகும் இவர், ஓராண்டு காலம் பதவியில் தொடர்வார். குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளரான அச்சல் குமார் ஜோதி, கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 

தற்போது, இவர் நஜீம் ஜைதி ஓய்வுக்குப் பிறகு தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளதால், ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது.  தற்போது உருவாகும் காலியிடத்திற்கு புதிதாக ஒரு தேர்தல் ஆணையரும் நியமிக்கப்படுவார்.

Label