OUR CLIENTS
திரையுலகினரின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
திரையுலகினரின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் Posted on 07-Jul-2017 திரையுலகினரின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

 ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிவிதிப்பு தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் எழுப்பியுள்ள கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் திரையுலகை நம்பியுள்ள லட்சோப லட்ச மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால், தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ் திரையுலகினர் பலரும் இப்பிரச்சினை குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். 

ஆனால், ரஜினி அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதால், சென்னை திரும்பியது இது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ட்வீட் பக்கத்தில் இரட்டை வரிவிதிப்பு குறித்து ரஜினியும் குரல் கொடுத்திருப்பதால், விரைவில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Label