OUR CLIENTS
9 பேர் தலைகளை துண்டித்து தீவிரவாதிகள் அட்டூழியம்
9 பேர் தலைகளை துண்டித்து தீவிரவாதிகள் அட்டூழியம் Posted on 10-Jul-2017 9 பேர் தலைகளை துண்டித்து தீவிரவாதிகள் அட்டூழியம்

மோம்பாசா, ஜூலை 10-
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஆடு, கோழிகளை வெட்டி பலியிடுவதுபோல் 9 பேர்களின் தலைகளை துண்டித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

கென்யாவின் லிணீனீu மாவட்டத்தில் உள்ள ஜிமா மற்றும் பன்டன்காவோ கிராமங்களுக்குள் தீவிரவாதிகள் இரவு நுழைந்துள்ளனர். அங்கு நுழைந்த தீவிரவாதிகள் கிராமத்தில் இருந்த 9-பேரின் தலைகளை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதை நேரில் கண்ட கிராம மக்கள் கூறுகையில், திடீரென்று வந்த தீவிரவாதிகள் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் கிராமத்தில் இருந்த மக்களை கோழி, ஆடுகளை வெட்டுவது போல் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து போலிசார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கிறீ-ஷிலீணீதீணீணீதீ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் இவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

Label