OUR CLIENTS
ஏவுகணை தடுப்பு முறையை மீண்டும் சோதித்துப் பார்க்க அமெரிக்கா திட்டம்
ஏவுகணை தடுப்பு முறையை மீண்டும் சோதித்துப் பார்க்க அமெரிக்கா திட்டம் Posted on 10-Jul-2017 ஏவுகணை தடுப்பு முறையை மீண்டும் சோதித்துப் பார்க்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்கா, ஜூலை 10-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்த்துள்ளதால், அத்தகைய தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தடுப்பு முறையை மீண்டும் சோதித்துப் பார்க்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தாட் [ THAAD ] எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு முறையை அமெரிக்கா நிறுவியுள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி பாய்ந்து செல்லும் ஏவுகணை, எதிரி ஏவுகணையை தாக்கி அழித்துவிடும் வகையில் இந்த ஏவுகணை பாதுகாப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஏவுகணை முறியடிப்பு அமைப்பை இயக்கிப் பார்த்து சோதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அத்தகைய ஏவுகணை ஏவப்பட்டால் அலாஸ்கா மாநிலம் வரை வரலாம் என ஏற்கெனவே அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Label