OUR CLIENTS
ஏவுகணை சோதனையின் எதிரொலி வடகொரியா&சீனாவின் நிதி ஆதாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம்!
ஏவுகணை சோதனையின் எதிரொலி வடகொரியா&சீனாவின் நிதி ஆதாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம்! Posted on 10-Jul-2017 ஏவுகணை சோதனையின் எதிரொலி  வடகொரியா&சீனாவின் நிதி ஆதாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம்!

அமெரிக்கா, ஜூலை 10-
ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியாவை தண்டிக்கும் வகையில் அந்நாட்டிற்குக் கிடைத்து வரும் பொருளாதார உதவியை மறைமுகமாக நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையால் அமெரிக்காவிற்கு பாதிப்பு ஏற்டலாம் என அந்நாடு கருதுகிறது. வடகொரியாவைப் பொருளாதார ரீதியாக முடக்கினால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றும், வடகொரியாவின் அணு ஆயுதம் உள்ளிட்ட சோதனைகளுக்கான நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது. 

வடகொரியாவின் பொருளாதாரம் 90 சதவீதம் சீனாவையே சார்ந்துள்ளது. எனவே சீன நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை உடனடியாக செயல்படுத்தினால் சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என அமெரிக்கா கருதுவதால் இரண்டாம் நிலை சீன நிறுவனங்களுக்கான பொருளாதார உதவியை முதலில் நிறுத்திக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Label