OUR CLIENTS
சீன நதியை தூய்மை செய்யும் சேவையில் நாய்
சீன நதியை தூய்மை செய்யும் சேவையில் நாய் Posted on 10-Jul-2017 சீன நதியை தூய்மை  செய்யும் சேவையில் நாய்

ஜியாங்ஷூ, ஜூலை 10-
சீனாவில் ஆற்றில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நாய் ஒன்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்து சேவையாற்றி வருகிறது.

ஜியாங்ஷூ (jiangsu) மாகாணத்தில் உள்ள சுஜோ (suzhou)  நதியில் வழிப்போக்கர்கள், தண்ணீர் கேன்கள் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்கின்றனர். இதை அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய் ஒன்று நதியில் நீந்திச் சென்று எடுத்து வருகிறது.

சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை பின்னர் அந்த நாய் குப்பைத் தொட்டியில் போடுகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 தண்ணீர் கேன்களை நதியில் நீந்திச் சென்று நாய் எடுத்து வருகிறது. 10 ஆண்டுகளாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த நாய், இதுவரை 2 ஆயிரம் தண்ணீர் கேன்களை நதியில் இருந்து எடுத்து வந்துள்ளது.

Label