OUR CLIENTS
அப்துல்கலாமின் நினைவு மணிமண்டபம் 27-ம் தேதி பிரதமர் மோடி திறப்பு
அப்துல்கலாமின் நினைவு மணிமண்டபம் 27-ம் தேதி பிரதமர் மோடி திறப்பு Posted on 10-Jul-2017 அப்துல்கலாமின் நினைவு மணிமண்டபம் 27-ம் தேதி பிரதமர் மோடி திறப்பு

ராமேசுவரம், ஜூலை 10- 
ராமேசுவரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி திறந்து வைக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பில் அப்துல்கலாம் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக பேக் கரும்பில் அப்துல்கலாம் மணிமண்டபம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதற்கான திறப்பு விழா அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. 

 இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் மோடி 27-ம் தேதி ராமேசுவரம் வருவதையொட்டி பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் அப்துல் கலாம் மணிமண்டப இறுதி பணிகளை கலெக்டர் நடராஜன் நேற்று பார்வையிட்டார். 

பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 27-ம் தேதி நடைபெறும் விழாவையொட்டி மணி மண்டபம் எதிரே மேடை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி ரூ.50 கோடி மதிப்பில் முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை போடப்பட்டுள்ள புதிய சாலையையும் திறந்து வைக்கிறார்.

Label