OUR CLIENTS
காமராஜர் துறைமுக தனியார் மயமாக்கலை கைவிட நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம்
காமராஜர் துறைமுக தனியார் மயமாக்கலை கைவிட நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம் Posted on 10-Jul-2017 காமராஜர் துறைமுக தனியார் மயமாக்கலை கைவிட நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 10-
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், காமராஜர் துறைமுகம் மாநில பொருளாதாரத்தைக் கட்டமைக்கக் கூடிய முக்கிய இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தத் துறைமுகம் 2017ம் ஆண்டில் 480 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

பொதுத்துறை நிறுவனங்களுள் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் எண்ணத்தில் இருப்பதாக வந்த தகவலால், தான்கவலையுற்று இருப்பதாக அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் முடிவு மத்திய அரசின் விஷன் மற்றும் மிஷன் ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்குவது மாநில நலனுக்கு எதிரானது என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Label