OUR CLIENTS
மது அருந்தி வாகனங்கள் ஓட்டிய 12 ஆயிரம் பேர் லைசன்ஸ் ரத்து
மது அருந்தி வாகனங்கள் ஓட்டிய 12 ஆயிரம் பேர் லைசன்ஸ் ரத்து Posted on 10-Jul-2017 மது அருந்தி வாகனங்கள் ஓட்டிய 12 ஆயிரம் பேர் லைசன்ஸ் ரத்து

சென்னை, ஜூலை 10-
மது அருந்தி வாகனங்கள் ஓட்டிய 12 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபையில் போக்குவரத்து விவாதத்தின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பதிலுரை வருமாறு: 13வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

தற்போது தினந்தோறும் டீசல் விலை மாறி வருகின்ற சூழலில் 2012 முதல் மார்ச் 2017 வரை 2 ஆயிரத்து 173.89 கோடி ரூபாய் மானியமாக போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்கியுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கெள்கிறேன்.

அம்மா குடிநீர் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை வெறும் பத்து ரூபாய். வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூபாய் இருபது மத்திய அரசின் ரயில்வே துறை வழங்கும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூபாய் பதினைந்து.  31.03.2017 வரை  அம்மா குடிநீர் திட்டத்தின் மூலம் 17 கோடியே 20 லட்சத்து 9 ஆயிரத்து 200 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .

மது அருந்தி வாகனம் ஓட்டிய வாகன ஒட்டுநர்களின், ஓட்டுநர் உரிமங்களின் மீது தற்காலிக இரத்து மற்றும் நிரந்தர இரத்து செய்யப்பட்ட வகையில் அதன் எண்ணிக்கை 4552 மற்றும் 1186 ஆகும். உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஒட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை முறையே 6723 மற்றும் 64 ஆகும். 2. விபத்து அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிய தேசிய நெடுஞ்சாலை துறையினரால் தணிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியை 31ம் தேதிக்குள் முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

இவ்வாறாரான இடங்களில் செய்ய வேண்டிய முக்கிய அபிவிருத்தி பணிகளின் விவரம் பெறப்பட்ட பிறகு அரசு உடனடியாக போதிய நடவடிக்கை எடுத்து விபத்துகளை குறைக்க முடியும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.மாநிலம் முழுவதும் ஏற்படும் விபத்துகளை பகுப்பாய்வு செய்ய காவல்துறை, நெடுஞ்சாலை துறை, மருத்துவத்துறை மற்றும் போக்குவரத்துறை கொண்ட குழு ஒன்று. 

போக்குவரத்து ஆணையர் சாலை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ஏற்படுத்தபட்டு செயல்பட துவங்கிவிட்டது என்பதையும் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Label