OUR CLIENTS
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்த பணியாளர்கள் 15 பேருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்த பணியாளர்கள் 15 பேருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கினார் Posted on 10-Jul-2017 மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்த பணியாளர்கள் 15 பேருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

சென்னை, ஜூலை 10-
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (10.7.2017) தலைமைச் செயலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம்  மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 151 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் ஜனவரி 2012-இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  அவர்களால் துவக்கப்பட்டது. இதுவரை, 8,692 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,190 செவிலியர்கள் உட்பட 20,862 பணியாளர்களை இவ்வாரியம் தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மக்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் உயர்தர மருத்துவ சேவைகள் தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை ஏற்படும்.


மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இதய அறுவை சிகிச்சை சிறப்பு (எச்.எல்.எச்.எம்.) டெக்னீசியன் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 5 நபர்கள், பிளாஸ்டர் டெக்னீசியன் தரம்-II  பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்கள், அனஸ்தீஸியா டெக்னீசியன் தரம்-II  பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 68 நபர்கள், என மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 151 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் (பொறுப்பு) மோகன் பியாரே, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Label