OUR CLIENTS
நிலவில் சர்வதேச ஆய்வு மையம் & இந்தியா கட்டாயம் பங்கேற்பு!
நிலவில் சர்வதேச ஆய்வு மையம் & இந்தியா கட்டாயம் பங்கேற்பு! Posted on 10-Jul-2017 நிலவில் சர்வதேச ஆய்வு மையம் & இந்தியா கட்டாயம் பங்கேற்பு!

நாமக்­கல், ஜூலை 10
நில­வில் சர்­வ­தேச ஆராய்ச்சி மையம் அமைக்­கும்­போது இந்­தி­யா­வும் பங்­கேற்­கும் என்று இஸ்ரோ மைய இயக்­கு­னர் மயில்­சாமி அண்­ணா­துரை கூறி­னார்.

நாமக்­கல் மாவட்­டம், திருச்­செங்­கோடு அருகே தனி­யார் கல்­லுவரி பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்­து­கொள்ள வந்த இஸ்ரோ மையத்­தின் இயக்­கு­னர் மயில்­சாமி அண்­ணா­துரை நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:

இந்­திய விண்­வெளி ஆய்­வுக்­க­ழ­கம், அறி­வி­ய­லைத் தாண்டி மக்­க­ளுக்கு உத­வும் வகை­யில் உல­க­ளா­விய அளவில் ஆராய்ச்சி செய்து வரு­கி­றது. உல­க­ளா­விய அள­வில் எல்­லாத்­து­றை­யி­லும் இந்­திய செயற்­கை­க் கோள்­கள் மிக சிறப்­பாக செயல்­பட்டு வரு­கி­றது.

 செல்­போன் டவர் இல்­லாத இடங்­க­ளில் கூட இன்­டர்­நெட் கிடைக்­கும் வகை­யில் அடுத்த கட்ட முயற்சி நடை­பெற்று வரு­கி­றது. அடுத்த தலை­மு­றை­யி­லும் ஆராய்ச்சி தொடர வேண்­டும் என்­ப­தற்­காக மாண­வர்­கள் செயற்­கைக்­கோள் தயா­ரிக்க வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.  

அரசு மட்­டு­மன்றி தனி­யார் துறை­யி­ன­ரும் செயற்­கை­க் கோள் உரு­வாக்க முடி­யுமா? என்ற ஆய்வு நடை­பெற்று வரு­கி­றது. இது முழுமை அடை­யும்­போது, அர­சுக்கு இணை­யாக தனி­யா­ரும் செயற்­கைக்­கோள்­களை உரு­வாக்க முடி­யும். அதற்கு அதி­க­மான  இன்ஜினியரிங், அறி­வி­யல் படித்த இளை­ஞர்­கள் முன்­வ­ர­வேண்­டும்.

நிலவு இயற்­கை­யா­னது, நிரந்­த­ர­மா­னது. எனவே, சர்­வ­தேச விண்­வெளி மையம், நில­வில் அமைக்க வேண்­டும் என்று நினைக்­கி­றேன்.  இதற்­காக சர்­வ­தேச நாடு­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­கி­றது. நில­வில் சர்­வ­தேச ஆராய்ச்சி மையம் அமைக்­கும்­போது இந்­தியா அதில் கலந்து கொள்­ளும்.

நில­வில் 60 செயற்­கை­க்கோள்­கள் செய்­யா­ததை நமது ஒரு செயற்­கை­க்கோள் சிறப்­பாக செய்­துள்­ளது. இது­வரை 40 முறை செவ்­வாய்க்கு செயற்­கைக்­கோள் சென்­றா­லும் யாரும் செய்­யா­ததை இந்­திய செயற்­கை­கோள் செய்து வெற்றி பெற்­றுள்­ளது.

மிகத்­துல்­லி­ய­மாக 50 செ.மீட்­டர் உள்ள பொருட்­க­ளைக்­கூட தெளி­வாக பார்க்­கும் வகை­யில் செயற்­கை­கோள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 15 நிமி­டத்­துக்கு ஒரு­முறை இந்­தியா முழு­வ­தும் பரு­வ­நிலை மாற்­றங்­களை மிகத்­துல்­லி­ய­ மாக முன் கூட்­டியே கணிக்­கும் 3 செயற்கைக் கோள்­கள், தங்­கள் பணியை மிகச்­சி­றப்­பாக செய்­கின்­றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Label