OUR CLIENTS
சசிகலா கூடாரத்தை விட்டு எடப்பாடி வரமுடியுமா...! பன்னீர் செல்வம் அதிரடி கேள்வி கனைகள்
சசிகலா கூடாரத்தை விட்டு எடப்பாடி வரமுடியுமா...! பன்னீர் செல்வம் அதிரடி கேள்வி கனைகள் Posted on 10-Jul-2017 சசிகலா கூடாரத்தை விட்டு எடப்பாடி வரமுடியுமா...!  பன்னீர் செல்வம் அதிரடி கேள்வி கனைகள்

ராமநாதபுரம், ஜூலை 10-
சசிகலா கூடாரத்தை விட்டு எடப்பாடி அரசு வரமுடியுமா, முடியாதா? என்று ராமநாதபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகரில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினரின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன்.

முன்னாள் சபாநாயகர் பாண்டியன் உட்பட முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்பிக்கள் முன்னாள் எம்எல்ஏ க்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் தருமர் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

நம் அணியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பொய்களை தொடர்ந்து அள்ளி வீசி வருகிறார் ஸ்டாலின். அதிமுக செல்வாக்கை குறைக்கப்பார்க்கிறார். ஆனால் ஸ்டாலினின் பொய் செல்லாது. ஸ்டாலின் செயல் அவரது தந்தை கருணாநிதியை போன்றுள்ளது. எடப்பாடி அரசு திமுகவுடன் புதிய கூட்டணி புதுமையான கூட்டணி வைத்துள்ளனர்.

ஆனால் இத்தகைய திமுகவின் சூழ்ச்சி பலிக்காது. இதைத் தொடர்ந்து எடப்பாடி அரசினை தமிழக மக்கள் விரட்டியடித்து துரத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது நீதி விசாரணை வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் எடப்பாடி அரசு அதனை நிறைவேற்றவில்லை. மேலும் நான் கொடுத்துள்ள கோரிக்கையினை எடப்பாடி அரசு காதுகொடுத்து கேட்பதாகவும் இல்லை. சசிகலா கூடாரத்துடன் எடப்பாடி அரசு கபட நாடகம் நடத்தி வருகின்றார்.

அதை விட்டுவிட்டு சசிகலா கூடாரத்தில் இருந்து வெளிவர முடியுமா முடியாதா?. இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் நல்ல முடிவு ஏற்பட்டு ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும். இவ்வாறு அவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி பொருளாளர் விஜய் ராமகிருஷணன் நன்றி கூறினார். பன்னீர் செல்வம் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் நகரம் முழுவதும் கட்சிக்கொடிகள் டிஜிட்டல் பேனர்கள் சாலையின் இருபுறமும் ஜொலித்தன.

Label