OUR CLIENTS
மத்திய கைலாஷ்-மகாபலிபுரம் வரை நவீன உயர்மட்ட பாலம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மத்திய கைலாஷ்-மகாபலிபுரம் வரை நவீன உயர்மட்ட பாலம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Posted on 10-Jul-2017 மத்திய கைலாஷ்-மகாபலிபுரம் வரை நவீன உயர்மட்ட பாலம் -  முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஜூலை 10- 
மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை உயர்மட்ட மேம்பாலமும், மெட்ரோ ரெயில் பாதையும் வருவதால் அதற்கு ஏற்ப திட்டம் உருவாக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் இன்று வருவாய் துறை மானிய கோரிக்கை மீது அரவிந்த் ரமேஷ் (தி.மு.க.) பேசினார்.  அப்போது மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்போவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அது என்ன நிலையில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்-வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது: 110-வது விதியின் கீழ் அங்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, அது இன்னமும் நடைபெறவில்லை என்று உறுப்பினர் குறிப்பிட்டார்.

அந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளும் வர உள்ளன. அதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

எனவே மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை உயர்மட்ட மேம்பாலமும், மெட்ரோ ரெயில் பாதையும் வருவதால் அதற்கு ஏற்ப திட்டம் உருவாக்கப்பட்டு முடிவு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

Label