OUR CLIENTS
மனிதர்களை மனித மலத்தை அள்ளச் சொல்லி கொடுமைப்படுத்திய பிடிஓ!
மனிதர்களை மனித மலத்தை அள்ளச் சொல்லி கொடுமைப்படுத்திய பிடிஓ! Posted on 11-Jul-2017 மனிதர்களை மனித மலத்தை அள்ளச் சொல்லி கொடுமைப்படுத்திய பிடிஓ!

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 11-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்தில் உள்ள கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அண்ணா நகர் ஆகிய ஊர்களில் இருந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கால்வாய் சுத்தம் செய்தல், ஏரியில் மண் எடுத்தல், முட்செடிகளை வெட்டுதல் ஆகிய வேலைகளை செய்யச் சொல்லுகிறார்கள். 

மண் எடுப்பதற்கு மட்டும் குறிப்பிட்ட அளவு கொடுத்து விடுகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக ஓவர்சியர், பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் வேலையை பிரித்து விடுவார்கள். ஆனால் வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு பணம் வங்கியில் போடுவதில்லை. 

வேலை செய்யாமல் இருக்கும் பெண்களுக்குமட்டும் வங்கி கணக்கில் பணம் செலுத்துகின்றனர். வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்தில் 100 பேர் ஏரி வேலை செய்யும் பெண்களுக்கு 75 நாட்களுக்கு உண்டான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லையாம். ஏரி வேலை செய்யும் கூலியை நம்பி சில குடும்பங்கள் உள்ளன. 

மழை இல்லாத காரணத்தால் ஏரி வேலைக்கு வருகின்றனர். வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்தில் ஏரி வேலை செய்யும் பெண்களை மூன்று குழுக்களாக பிரித்து ஒரு குழுவுக்கு 20, மற்றொரு குழுவுக்கு 60, மூன்றாவது குழுவுக்கு 80, வேலை செய்யாதவர்களுக்கு 120 தருகின்றனர். 

வேலை செய்யாதவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.120 ஏறி விடுகிறது. அனைவரும் ஒரே மாதிரியான வேலைதான் செய்கின்றனர். ஆனால் கூலியில் மட்டும் வேறுபாடு இருக்கிறது. மத்திய அரசு ஏரி வேலைக்கு அளித்த பணம் ரூ.205. ஆனால் வேலை செய்யாத பெண்களுக்கு ரூ.120 கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு விருப்பம் போல கூலி வழங்கப்படுகிறது. 

கோழிமேக்கனூர் வைரவ மண்டபத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இதற்கு கால்வாய் அணையில் இருந்து வைரவ மண்டபம் வரை உள்ள அணை கால்வாய், வண்டல் மண், மணல், முள்புதர், புல்பூண்டு, மரம், செடி ஆகியவை இருக்கின்றன. 

கால்வாயில் மண், மணல் அள்ளுவதற்கும், செடி, புல், பூண்டுகள், மரங்கள் வெட்டுவதற்கும் ஏரி வேலை செய்யும் பெண்களை வைத்து வேலை வாங்கப்படுகிறது. இந்த அணை கால்வாயில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர், செங்கல் மேடு, முருகர் மலை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 3 கிலோ மீட்டர் தொலைவில் சென்று அணை கால்வாயில் மலம் கழிக்கின்றனர். 

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் இறந்துபோன நாய்களையும், கழுதைகளையும், கோழி இறைச்சியையும் அணை கால்வாயில் போட்டு விடுகின்றனர். வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்து செயலாளர் ஷகிம், பிடிஓ மகாலிங்கமிடம் சென்று அணை கால்வாயில் மனித கழிவுகள், கோழி கழிவுகள் இறந்த விலங்குகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. 

எப்படி நாங்கள் வேலை செய்வோம் என்று கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்த பிடிஓ உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மலம் கழித்துவிட்டால் அப்படியே விட்டுவிடுவீர்களா அது உங்களுக்கு நாற்றம் அடிக்காதா என்று பிடிஓவும் செயலாளரும், களப்பணியாளரும் கூறியதின் பேரில் மனிதர்களையே மனிதக்கழிவுகளை அள்ள வைத்துள்ளனர். 

மேலும் ஏரி வேலை செய்யாமல் பாட்டு பாடிக் கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும், தூங்கி கொண்டிருக்கிறீர்கள் என்றும் கூறி உள்ளனர். மேலும் நேற்று காலை ஏரி வேலை செய்யும் பெண்கள் 100 பேர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களை ஷகிம் பிடிஓவும், பஞ்சாயத்து செயலாளரும், களப்பணியாளரும் பிடிஓ அலுவலகம் உள்ளே விட மறுத்துவிட்டனர். 

பெண்கள் அனைவரும் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் பிடிஓ ஜீப்பில்  ஏறி காவல் ஆய்வாளர் நிலையத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார். அங்கு சென்ற சில பெண்கள் காவல் ஆய்வாளர் ஆனந்தவேலுவிடம் மனு கொடுத்த பெண்களை ஷகிம், பிடிஓ பார்த்து ஏன் நான் உங்களை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்தேன் வரவில்லை, நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்களோ நான் பார்த்து கொள்கிறேன். 

உங்கள் மீது காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுக்கிறேன் என்று பெண்களை மிரட்டியுள்ளார் பிடிஓ. குறிப்பாக பண்ணையார் போன்று பிடிஓ மிரட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. பிடிஓ அலுவலகத்துக்கும், வாணியாறு அணைக்கும் என்ன தொடர்பு? ஏரி வேலை செய்யும் பெண்களை ஏன் மிரட்டுகிறார் என்பதும் தெரியவில்லை. 

மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. எப்படி ஏரி வேலை செய்யும் பெண்களை மனிதக்கழிவுகளை அள்ள வைத்தார். மனிதகழிவுகளை அள்ள வைத்து மனித உரிமைகளை மீறி செயல்பட்ட பிடிஓ மகாலிங்கம் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் பொதுமக்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும், உரிய விசாரணை நடத்த வேண்டும். உண்மை எதுவென்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்படி பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் விசசாரணை நடத்தவில்லையென்றால் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், மனிதகழிவுகளை மனிதர்களையே அள்ள வைத்ததற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label