OUR CLIENTS
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தி.மு.க., சுறுசுறு; அ.தி.மு.க., மெத்தனம்
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தி.மு.க., சுறுசுறு; அ.தி.மு.க., மெத்தனம் Posted on 11-Jul-2017 வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தி.மு.க., சுறுசுறு; அ.தி.மு.க., மெத்தனம்

சென்னை, ஜூலை 11-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, தேர்தல் கமிஷன் நேற்று நடத்திய சிறப்பு முகாமில், தி.மு.க.,வினர் சுறுசுறுப்பாக செயல் பட்ட நிலையில், கோஷ்டி சண்டையால், அ.தி.மு.க.,வினர் இப்பணியில் ஆர்வம் காட்டவில்லை.

வாக்காளர்,பெயர்,சேர்ப்பு,சிறப்பு,முகாம்,தி.மு.க., சுறுசுறு; அ.தி.மு.க., மெத்தனம் தேர்தலில் ஓட்டளிக்க, வாக்காளர் பட்டியலில், பெயர் இடம் பெற வேண்டும். இதற்காக, தகுதி யான நபர்களை பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. 

அதன்படி, இளம் வாக்காளர்களை பட்டியலில்  சேர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இளைஞர்கள், ஆர்வமுடன் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

வாக்காளர் சேர்ப்பு பணியில், தி.மு.க.,வினர் தீவிர மாக செயல்பட்டனர். கோஷ்டி சண்டையால், அ.தி.மு.க.,வினர் அந்த பணியில்அக்கறை காட்ட வில்லை.காங்., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணியில் கவனம் செலுத்தவில்லை.இது குறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது:

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, அவரின் உத்தரவுப்படி, சிறப்பு முகாம் நடக்கும் போது, அ.தி. மு.க.,வினர், தங்கள் பகுதியில் உள்ள இளம் வாக்கா ளர்கள்,பெயர் விடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்டுவர். 

இதற்காக, முகாம் நடக்கும் நாளன்று, தெருக்களில், மேஜை, நாற்காலி போட்டு, கட்சி கொடியை கட்டி, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியில் ஈடுபடுவர். இதன் மூலம், தேர்தலின் போது, வாக்காளர்களின்  விபரத்தை கட்சியினர் துல்லியமாக தெரிந்தி ருப்பர். 

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி செய்வோருக்கு, தலைமை தரும் பணத்தை, ஜெயலலிதாவுக்கு பயந்து, கட்சி முன்னணி யினர் முழுவதும் தருவர். தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளில், குறைந்த பணம் மட்டும் தரப்படும்.இதனால், அவர்கள் அந்த பணியில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்; 

தற்போது, ஜெ., இல்லாத தாலும், அ.தி.மு.க., மூன்று அணிக ளாக பிரிந் திருப்பதாலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், அ.தி. மு.க.,வினர் அக்கறை காட்ட வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label