OUR CLIENTS
ரயில்வே ஊழியர் மீது தாக்குதல்
ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் Posted on 11-Jul-2017 ரயில்வே ஊழியர் மீது தாக்குதல்

விழுப்புரம், ஜூலை 11-
விழுப்புரத்தில், ரயில்வே ஊழியரை தாக்கிய புகாரில் விழுப்புரம் நகர உதவி காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

 விழுப்புரம் ரயில்வேயில் ஊழியராகப் பணிபுரிபவர் சுந்தர்ராஜன். ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை நின்றிருந்த இவரை, அவ்வழியே ரோந்து வந்த நகர காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் அழைத்து விசாரித்தார்.

 அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், சுந்தர்ராஜனின் கன்னத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதில், செவித் திறன் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சுந்தர்ராஜன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். 

அதனடிப்படையில் விசாரித்த எஸ்.பி. ஜெயக்குமார், காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Label