OUR CLIENTS
வேலூர் சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி!
வேலூர் சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி! Posted on 11-Jul-2017 வேலூர் சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த  இந்திய வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன்  மலர்வளையம் வைத்து அஞ்சலி!

வேலூர், ஜூலை 11-
வேலூர் கோட்டை மக்கான் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இந்திய நாட்டை அடிமைபடுத்தி இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய படை சிப்பாய்கள் வேலூர் கோட்டையில் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் முதன்முதலில் புரட்சியில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்வே இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட ஒரு முதல் படியாகும். 

இந்த சிப்பாய் புரச்சியினால் பல இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் நினையாக ஆண்டுதோறும் ஜூலை 10 ஆம் நாள் சிப்பாய் புரட்சியில் உயிரிழ்ந்த வீரர்ளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் வேலூர் கோட்டை மக்கான் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மலர்வளையம் வைத்து அஞ்கலி செலுத்தினார்.  இந்நிகழ்ச்சிக்கு பின் சிப்பாய் புரட்சியின் நினைவாக தயாரிக்கப்படும் 'மண்ணில் ஈரம் காயவில்லை' என்கிற திரைப்பட துவக்க காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், உதவி இயக்குநர் (முன்னாள் படை வீரர் நலன் ) சங்கீதா, வருவாய் கேட்டாட்சியர் செவ்வராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம், வேலூர் வட்டாசியர் பாலாஜி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Label